Saint dnyaneshwar maharaj

13 ஆம் நூற்றாண்டு மராத்தி துறவி, கவிஞர், தத்துவஞானி மற்றும் யோகி

About Us

இந்த இணையதளத்தை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இது சத்தியத்தை உணர்த்தும் புனிதமான இணையதளம் ஆகும். இந்துக்களுடைய புனிதமான நூல் ஸ்ரீமத் பகவத் கீதை. இது அனைவரும் அறிந்த ஒன்றாகும். இதற்கு எத்தனையோ மகான்கள் விளக்கவுரை, எத்தனையோ மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. அதாவது இந்த இணையதளம் மூலம் மாகராஷ்ட்ராவில் பிறந்து, பிறவியிலேயே ஞான விழிப்புணர்வோடு பிறந்த மகானைப் பற்றியது. இவரைப் பற்றி இன்னும் தமிழில் சரியான நூல்களோ மற்றும் இவர் போதித்த எளிதில் ஆன்மாவை அறிந்து பிறவிப்பிணியை நீக்கக் கூடிய இவருடைய உபதேசங்கள் தமிழில் வெளிவரவில்லை. ஆனால் வடநாடுகளில் மட்டுமல்ல ஆங்கலத்திலும் அனேக அந்நிய மொழிகளிலும் வெளிவந்துள்ளது. இவர் பிறந்த காலம் கி.பி.1275 – 1296, இருபத்தோரு வருடங்கள் வாழ்ந்து தான் எதற்காக இப்பூவுலகிற்க்கு வந்தோமோ வேலை முடிந்தவுடன் பூனே (மகராஷ்ட்ரா) அருகில் உள்ள ஆலந்தியில் ஜீவ சமாதி அடைந்தார். இவரைப் பற்றிய வரலாறுகளை ‘பக்த விஜயம்’ என்ற நூலிலும் எழுதப்பட்டுள்ளது. மேலும் இந்த இணைதளத்தில் உள்ள இவரைப் பற்றிய விரிவான வரலாறினை நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் (Click Here) செய்து கொள்ளலாம்.

இந்த இணையதளத்தின் முக்கிய நோக்கம்


ஸ்ரீமத் பகவத் கீதைக்கு மராத்தியில் இவர் வியாக்கினமாக பாவார்த்த தீபிகை (ஸ்ரீ ஞாநேச்வரீ – Sri Janeshwari ) எழுதினார். கி.பி.1934ல் ஸ்ரீ தி.ப.கோதண்டராமைய்யர் மராட்டியிலிருந்து கருத்துப் பிழை மாறமல் அப்படியே நம் தமிழ் மொழியில் மொழிபெயர்த்து அருளினார். இந்த நூல் எழுதுவதற்கு முன்பே தி.பி.கோதண்டராமைய்யர் அவர்கள் சுவாமி விவேகனந்தரையும் சந்தித்து அவரிடமும் சில ஆலோசனைகளை பெற்றுள்ளார். இந்த நூல் ஸ்ரீ ஞாநேச்வரீ (ஸ்ரீமத் பகவத் கீதை) என்ற பெயரில் ஸ்ரீ ராம நாம வங்கி, பகவன் நாமா பப்ளிகேஷன்ஸ் வெளியீடு, ராம மந்திரம், 2/3 வினாயகம் தெரு, மேற்கு மாம்பழம், சென்னை – 600 033. தொலைபேசி எண். 044-24893736 என்ற முகவரியில் கிடைக்கிறது.
நாங்கள் ஏன் இந்த நூலின் விளக்கவுரையை மிக உயர்வாக கூறுகிறோம் என்பதை கீழே காணலாம்.
ஸ்ரீமத் பகவத் கீதையில் ஒரு சுலோகத்தில் பகவான் கிருஷண்ணர், அர்ஜுனனிடம் ,

இந்த சுலோகத்திற்கு கீழ்வருமாறு விளக்கம் தந்துள்ளார்.

இந்த விளக்கத்தை வைத்து மற்ற விளக்கவுரைக்கும் ஸ்ரீ ஞாநேச்வரர் மகாராஜ் எழுதிய விளக்கவுரைக்கும் உள்ள வித்தியாசத்தை ஆன்மீக நண்பர்கள் புரிந்து கொள்ளலாம்.

மேலும் இவர் எழுதிய நூல்கள் அமிர்தானுபவம் (கி.பி.1292), சங்கதேவ பாசஸ்தி (மடல்) மற்றும் ஹரி பாட் (கி.பி.1294). இந்த நூல்கள் மராத்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் மிகப்பிரபலமாக வடநாட்டில் வெளிவந்துள்ளது. வடநாட்டில் 13.01.1999 இல் இந்திய அரசாங்கமே ஸ்ரீ ஞாநேச்வரீ என்ற பெயரில் Train சேவையைத் தொடங்கியது. மற்றும் அதே வருடம் (1999) ஸ்ரீ ஞாநேச்வரீ பெயரில் ஒரு ரூபாய் நாணயமும் வெளியிட்டுள்ளது. ஆனால் தமிழில் மட்டும் இவரைப் பற்றி செய்திகள் இதுவரை வெளிவராமல் இருந்தது. இப்பொழுது ஒரு பெரிய ஆன்ம அனுபூதி பெற்ற தமிழர் ஒருவரால் அவருள் ஸ்ரீமத் ஞாநேச்வர மாகராஜ் எழுந்தருளி விளக்கியுள்ளார். இந்த நூல் கார்த்திகை திரியோஸ்திசியும் கார்த்திகை தீபமும் கூடிய தினத்தன்று 12.12.2016 வெளிவந்தது.

இந்த நூல் ஞாநேச்வரீயை விட மிக உயர்ந்த நிலையில் உள்ள நூலாகும். ஏனென்றால் ஞாநேச்வரீயானது ஸ்ரீ கிருஷ்ணனர், அர்ச்சுனனுக்கு உபதேசித்தது. ஆனால் ஞாநேச்வரரின் அண்ணன் தான் அவருக்கு குருநாதர் ஆகும். அவர் ஒரு முறை ஞாநேபா நீ ஞாநேச்வரீக்குக் கூறிய விளக்கம் மிகச்சிறந்ததாகக் கருதுகிறேன். இருந்தாலும் என்னுடைய குரு (காகினிநாத்) எனக்குக் கற்றுக்கொடுத்து நான் உனக்கு உரைத்த ஆத்மவித்தையை உன்னுடைய சுய அனுபவத்தைத் திருவாய்மொழியால் மீண்டும் நான் கேட்க ஆசைப்படுகிறேன். குருநாதரான உன் அண்ணன் நான் கூறியதற்குச் செவிசாய்த்து நீ உன் திருவாயால் இதை கூற வேண்டும் என்று அவர் கூறியதனால் இந்த நூல்கள் வெளிவந்தன.

இதை தன்னை (இருப்பு – ஆத்மா) உணர வேண்டுமென்று ஏக்கத்துடன் இருக்கும் மெய்யன்பர்களுக்கு இந்த இணையதளத்தைச் சமர்ப்பிக்கிறோம்.

குறிப்பு : ஞாநேச்வரீ மட்டும் நீங்கள் விரும்பினால் மேலே கொண்ட முகவரியைத் தொடர்பு கொண்டு வாங்கிக் கொள்ளவும் மற்ற மூன்று நூல்களும் இந்த இணையதளத்திலேயே நீங்கள் இலவசமாக பதவிறக்கம் செய்து கொள்ளுமாறு (Pdf. format Tamil) தந்துள்ளோம்.

ஞானதேவன் கூறுகிறேன்‚
முழு உலகமும் இவ்விழாவை
இவ்விருந்துண்டு ஆனந்தமாய் கொண்டாடட்டும்

ஓம் தத் ஸ்த் –