Saint dnyaneshwar maharaj

13 ஆம் நூற்றாண்டு மராத்தி துறவி, கவிஞர், தத்துவஞானி மற்றும் யோகி

Saint Dnyaneshwar Maharaj

முழு உலகமும் இவ்விழாவை இவ்விருந்துண்டு ஆனந்தமாய் கொண்டாடட்டும்

இந்த இணையதளத்தை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இது சத்தியத்தை உணர்த்தும் புனிதமான இணையதளம் ஆகும். இந்துக்களுடைய புனிதமான நூல் ஸ்ரீமத் பகவத் கீதை. இது அனைவரும் அறிந்த ஒன்றாகும். இதற்கு எத்தனையோ மகான்கள் விளக்கவுரை, எத்தனையோ மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. அதாவது இந்த இணையதளம் மூலம் மாகராஷ்ட்ராவில் பிறந்து, பிறவியிலேயே ஞான விழிப்புணர்வோடு பிறந்த மகானைப் பற்றியது. இவரைப் பற்றி இன்னும் தமிழில் சரியான நூல்களோ மற்றும் இவர் போதித்த எளிதில் ஆன்மாவை அறிந்து பிறவிப்பிணியை நீக்கக் கூடிய இவருடைய உபதேசங்கள் தமிழில் வெளிவரவில்லை. ஆனால் வடநாடுகளில் மட்டுமல்ல ஆங்கலத்திலும் அனேக அந்நிய மொழிகளிலும் வெளிவந்துள்ளது. இவர் பிறந்த காலம் கி.பி.1275 – 1296, இருபத்தோரு வருடங்கள் வாழ்ந்து தான் எதற்காக இப்பூவுலகிற்க்கு வந்தோமோ வேலை முடிந்தவுடன் பூனே (மகராஷ்ட்ரா) அருகில் உள்ள ஆலந்தியில் ஜீவ சமாதி அடைந்தார். இவரைப் பற்றிய வரலாறுகளை ‘பக்த விஜயம்’ என்ற நூலிலும் எழுதப்பட்டுள்ளது. மேலும் இந்த இணைதளத்தில் உள்ள இவரைப் பற்றிய விரிவான வரலாறினை நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் (Click Here) செய்து கொள்ளலாம்.

அமிர்தானுபவம் சங்கதேவ பசாஸ்தி (மடல்) மற்றும் ஹரி பாட் Free Download PDF